தொழில் குரு-மேஷ ராசிக்கு குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை போன்ற முக்கிய ரீதியான பிரச்சினைகள் நீங்கி மாற்றங்கள் நிகழும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
பாக்ய குரு-ரிஷப ராசிக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார். 1, 3, 5 ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கிறார். இதனால் இதுவரை இருந்துவந்த சோர்வான மனநிலை மாறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம்
அஷ்டம குரு-மிதுன ராசிக்கு 8 ம் இடம் சென்று நீசமாகி அமர்கிறார். அஷ்டம குரு வந்து அஷ்டமச் சனி பாதிப்பை சற்றே குறைப்பார். புதிய வெற்றியை தரும். எதையும் செய்யமுடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
கடகம்
களத்திர குரு-குரு பகவான் 7ஆம் இடத்தில் அமர்கிறார். எல்லா விதத்திலும் யோகம் கிடைக்கும். கடந்த கால கஷ்டங்கள், மனக் குழப்பங்கள் நீங்கும். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது.
சிம்மம்
ருண ரோக சத்ரு குரு-குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சகல கவலைகளும் நீக்கும். உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கன்னி
பூர்வ புண்ணிய குரு-கன்னி ராசிக்கு குரு 5ஆம் வீட்டில் அமர்கிறார். எடுக்கும் முயற்சியில் ஆதாயம் கிட்டும். திருமண யோகம் கை கூடி வரும். மனநிம்மதி ஏற்படும். உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
துலாம்
சுக ஸ்தான குரு-துலாம் ராசிக்கு குரு 4ஆம் வீட்டில் அமர்கிறார். புது முயற்சிகளில் கவனம் தேவை. பயணங்களால் சோர்வு ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
தைரிய குரு-விருச்சிக ராசிக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் அமர்கிறார் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
தனுசு
குடும்ப குரு-தனுசு ராசிக்கு குரு 2ஆம் வீட்டில் அமர்கிறார். உடல் ஆரோக்கியம் மேம#3021;படும். திருமணம் கைகூடும். பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.
மகரம்
ஜென்ம குரு-மகரம் ராசிக்கு குரு 12ம் இடத்தில் அமர்கிறார். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம்
விரைய குரு-கும்பம் ராசிக்கு 11ம் இடத்தில் அமர்கிறார். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.
மீனம்
லாப குரு-மீனம் ராசிக்கு குரு 11ம் இடத்தில் அமர்கிறார். வேலை தொழிலில் நல்ல இட மாற்றங்கள் நிகழும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.லாபம் பெருகும். உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.