Tap to Read ➤

இன்றைய ராசி பலன்கள்

28-10-2020
மேஷம்
வரவும் செலவும் சமமாகும். உத்திகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்
குடும்ப பிரச்சனைகள் தீரும். அதிஷ்டமான நாள். அனைத்து வகையிலும் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

மிதுனம்
சுபகாரிய முயற்சிகள் யாவும் அனுகூலம் பெரும். பொருளாதார நிலை உயரும் நாள். ஆடம்பர பொருள்சேர்க்கையில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

கடகம்
மனதில் தடுமாற்றங்கள் அகலும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நாள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

சிம்மம்
சந்திராஷ்டமம் இருப்பதால் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது.

கன்னி
அனைத்து வகையிலும் இனிமையான நாள். அரசு வழியில் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உறுதுணையோடு இருப்பர். உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்
முயற்சியில் வெற்றி நிச்சயம். மனஉறுதி மேம்படும் நாள். உற்றார் உறவினர் வழியில் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வந்து உறுதுணையோடு இருப்பர்.

விருச்சிகம்
வரவுக்கு மீறிய செலவுகள் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாமல் இருக்கும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். தொழில் வளர்ச்சி உண்டு.

தனுசு
உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் நாள். பிடிவாதக் குணத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. சிலருக்கு கடன் வாங்க நேரிடலாம். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும்.

மகரம்
வெற்றிச் நிச்சயம். தொழில் ரீதியான நட்பு வட்டாரம் விரிவையும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.

கும்பம்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொன்பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்னை குறையும்.

மீனம்
உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.