Tap to Read ➤

இன்றைய ராசி பலன்கள்

24-10-2020
மேஷம்
கலைவாணியை வழிபட்டு காரியங்களைத் தொடங்க வேண்டிய நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

dailythanthi

ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

dailythanthi

மிதுனம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.

dailythanthi

கடகம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் நன்மை நண்பர்களால் கிடைக்கும். உயர்ந்த மனிதர்கள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பர்.

dailythanthi

சிம்மம்
பாக்கிகள் வசூலாகி பரவப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

dailythanthi

கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

dailythanthi

துலாம்
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

dailythanthi

விருச்சிகம்
சகல யோகங்களும் வந்து சேர சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல்கள் அதிகாலையிலேயே கிடைக்கும்.

dailythanthi

தனுசு
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். எதிர்பார்த்த தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

dailythanthi

மகரம்
யோகமான நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மூத்தோர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும்.

dailythanthi

கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் தொல்லை உண்டு. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

dailythanthi

மீனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பாராட்டும், புகழும் கூடும்.

dailythanthi